மக்களுக்காக போராடிய போராளிகளும் வறுமையில் தற்கொலை செய்யும் நிலையில்! யாழில் தொடரும் தற்கொலைகள்

வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள்  தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்தே வருகின்றன.

இவ்வாறானதொரு சம்பவம் நேற்று முன்தினமும்  யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் முன்னாள் பெண் போராளியான லாவண்யா என்ற 21 வயதுடைய யுவதி  தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்ப இதுவரை அரசாங்கத்தால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடந்தபாடில்லை.

சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் போராளிகளும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனாலேயே இவர்கள் சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்கின்ற நிலைமைக்கு ஆளாகின்றார்கள்.

இன்று தற்கொலை செய்து கொண்ட இந்த முன்னாள் பெண் போராளியான லாவண்யாவை அவளின் தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

உண்மையில் போராட்ட களத்தில் துணிச்சலுடன் களமாடிய லாவண்யா அப்பா அடித்தார் என்ற காரணத்தால் மட்டுமா? தற்கொலை செய்ய துணிந்திருப்பால் என்பதை நாம் சற்று ஆராயந்து பார்க்கத்தான் வேண்டும்.

லாவண்யா தனது தாய், சகோதரர்களுடன்

அவளின் குடும்பம் கடந்த வன்னி இடப்பெயர்வின் பின்னர் மிகவும் வறிய நிலையில் சீவியம் நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை பாடசாலைக்கு போகும் நான்கு தம்பிகள். தாய்தான் கூலிவேலை செய்து குடும்பப் பொறுப்பை முழுமையாக பார்க்க வேண்டிய நிலைமை.

வன்னியில் இருந்து  இடம் பெயர்ந்து சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆன போதும் அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை  கண்டுகொள்ளவில்லை. மிகச்சிறிய குடிசையிலேயே அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள்.

லாவண்யாவின் வீடு

வன்னியில் போராட்டத்தில் இருந்து பின்னர் குண்டு மழை பொழிய அந்த நெருப்பாற்றில் இருந்து உடமைகளை இழந்து  தப்பிவந்து இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்குள் இருந்து மீண்டு வந்த இந்த லாவண்யா யாழ்ப்பாணத்தில் சொந்த ஊருக்கு வந்தும் நிம்மதியில்லாத வாழ்க்கை.

குடும்ப கஸ்டம்; வீடு இல்லை; இவ்வாறே மன விறக்தியும் வறுமையும் நிறைந்ததாய் வாழும் வளரும் காலத்தில் வாழ்க்கை நடத்திய லாண்யாவிற்கு தந்தையின் கண்டிப்பு மனமுடைந்து போயிருந்த இவளை இலகுவாக தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது.

தனது மூத்த மகளை போரட்ட காலத்திலும் இடப்பெயர்விலும் இருந்து காப்பாற்றி வந்து இன்று அநியாயமாக இழந்து  தவிக்கும் இத்தாயின் உள்ளக்குமுறல் இனியாவது இந்த அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கேட்குமா?

யுத்தத்தின் பின்பு  தற்கொலைகள் அதிகரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் மிகவும் அதிகம் இதனை நாளாந்தம் செய்தியாக வெளியிடுவதாலும்  அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புள்ளிவிபரம் எடுப்பதும் அறிக்கையிடுவதாலும் எப்பயனும் இல்லை.
லாவண்யாவின் தாய்
அதற்கான காரணம் என்ன என்பதை கண்டு  நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தற்கொலைகளுக்கான அடிப்படை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதற்கு லாவண்யாவின் தற்கொலை ஒரு உதாரணம்.

உண்மையில் இவ்வளவு கஸ்டப்பட்டு மன அழுத்தத்துடன் வந்து சேர்ந்த லாவண்யாவின் குடும்பத்துக்கு அவர்களின் இழப்பை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய அவர்களுக்குரிய நிரந்தர வீட்டையாவது இந்த அரசும் அதன் அதிகாரிகளும் அன்று அமைத்துக் கொடுத்திருப்பார்களேயானால் லாவண்யாவுக்கும் அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கலாம்  இந்த துர்ப்பாக்கிய நிகழ்வும் நடந்திருக்காது.
லாவண்யாவின் தந்தை
ஆனால் என்ன நடந்தது இவர்களுக்கு குடிநீர் இல்லை, மலசலகூட வசதி இல்லை, வீடு இல்லை. இவர்களின் இழப்பை ஈடு செய்ய எவரும் இல்லை.

ஆனால் வாய்கிழிய வாக்குறுதிகளை மட்டும் இந்த அரசு இரண்டு வருடங்களாக அள்ளி வழங்கிக்கொண்டு எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டுள்ளது. அரசின் இச்செயல்பாடு  இவ்வாறான சம்பவங்களை வேண்டுமென்றே உருவாக்க முயற்சிப்பதாகவே இருக்கிறது.

இதற்கு அரச உயர் அதிகாரிகள் சிலரும்  தாங்கள் என்ன இனம் என்பதை மறந்து அரசுக்கு குடை பிடித்துக் கொண்டுள்ளனர். இன்று தமிழர் தாயகத்தில்   யுத்த முடிவுக்குப் பின்னர் சமுகவிரோத செயல்களும் சமுதாய சீர்கேடுகளும் அதிகரிப்தற்கு முழுப்பொறுப்பும் அரசாங்கமே ஏற்கவேண்டும்.

அரசின் செயல்களே இவற்றுக்கு  உரம் போடுவதாய் உள்ளதுடன்  அரசின் வலுவில்லாத சிவில் நிருவாகத் திறமையின்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த அரசு எமது தேசத்தை கட்டியெழுப்ப  மனப்பூர்மாக அக்கறையில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இவர்கள் எமது புலம் பெயர் உறவுகளையும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் இம்மக்களுக்கு உதவிசெய்ய அனுமதித்தாலே போதும். ஆனால் இந்த அரசுக்கு அதற்கும் மனசில்லை.
சுற்றிலும் காடுகளுக்கிடையில் உள்ள லாவண்யாவின் வீடு

இவ்வாறே தமிழினம் தொடாந்து பல்வேறு வழிகளில் முடிவில்லாது இன்னல்களை அனுபவித்து வருகிறது.

புலத்தில் எமதினத்தின் விடிவை எண்ணி அதற்காகவும் வாழும் உறவுகள் இருந்தாலும் வெறுமனே வீரவசனம் பேசிக்கொண்டு கொடியேந்திக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதோடு நின்றுவிடாது, மக்களுக்காக போராடிய போராளிகளும் போராட்ட அழிவில் இருந்து இன்னும் மீளமுடியாத மக்களினதும் வாழ்வை மீளமைக்கக் கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளில்  அவசரமாக செயற்பட்டு எமது உறவுகளை காக்க வேண்டியது இன்று கட்டாய தேவையாகும் என்பதையும் எம்மவர் கருத்தில் கொள்ளவேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s