செக்ஸ் வீடியோ கலாசாரத்தில் சிக்கி சீரழியும் அமெரிக்க இளம் பெண்கள்.

அமெரிக்காவில் சமீபகாலமாக செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் “கபே”யில் இளம் பெண்கள் செய்யும் செக்ஸ் சில்மிஷங்களை அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படங்களாக எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் வெளியிட போவதாக மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இளம் பெண்களுக்கு இன்டர்நெட் மீது தணியாத மோகம் உண்டு. வீட்டுக்கு தெரியாமல், சுதந்திரமாக இன்டர்நெட் மூலம் நண்பர்களுடன், “சாட்” செய்வதற்கு ஏராளமான நவீன இன்டர்நெட் “கபே”க்கள் அங்கு உள்ளன.அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில இளம் பெண்களுக்கு, தங்களது வீடுகளை விட, இன்டர்நெட் “கபே”க்களுக்கு செல்வதி்ல் தான் விருப்பம் அதிகம். இதுபோல், சமீபத்தின் இன்டியானா போலீஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இன்டர்நெட் “கபே”க்கு மூன்று இளம் பெண்கள் சென்றனர். 

தங்களுடன் வெப் கேமராவையும் கொண்டு சென்ற அவர்கள் தங்கள் நண்பர்களுடன் இன்டர்நெட் மூலமாக, “சாட்” செய்தனர். தங்களின் மார்பழகை வெப் கேமரா முன்பாக காட்டி மகிழ்ந்தனர். பின்னர், தங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.ஒரு வாரத்துக்கு பின், இன்டர்நெட் “கபே”க்கு சென்ற இளம் பெண்களில் ஒருவரை மர்ம நபர் ஒருவன், போன் மூலம் தொடர்பு கொண்டான். அவன், “இன்டர்நெட் கபே”யில் வெப் கேமரா முன், உன் அழகை காட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது. அதை என் நண்பர்களுக்கு இன்டர்நெட்டில் வெளியிட உள்ளேன். இதை தவிர்க்க வேண்டுமானால், உன் அழகை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள் எனக்கு வேண்டும்’ என்றான்.

வீட்டிலும் இதை கூற முடியாமல், போலீசாரிடமும் கூற முடியாமல் தவித்த அந்த பெண் வேறு வழியின்றி, அந்த மர்ம நபர் கூறியபடி, மேலும் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தார். இரண்டு முறை அந்த நபர் இவ்வாறு மிரட்டல் விடுத்தார்.இறுதியாக அந்த பெண், போலீசாரின் உதவியை நாடினார்.

போலீசார் விரித்த வலையில் அந்த நபர் வசமாக சிக்கினான். விசாரணையில், அவன் மேரிலாண்ட் பகுதியை சேர்ந்தவன் என்பதும், இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டுவதை ஒரு தொழிலாகவே செய்து வருவதும் தெரிய வந்தது. இது குறித்து அமெரிக்க போலீசார் கூறுகையில், “சமீபகாலமாக இது போன்ற ஆன்-லைன் செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள், பொழுதுபோக்கு, மகிழ்ச்சி என்ற பெயரில் தடம் மாறிச் செல்கின்றனர். இதை அவர்களது பெற்றோர் தான் கண்காணிக்க வேண்டும்” என்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: