• RSS தெரியாத செய்தியோடை

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS tharavu

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS kadukathi.com

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • RSS சினிமா நியூஸ்

  • ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
 • More than a Blog Aggregator
 • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

  Join 270 other followers

 • xxx

 • Advertisements

ஆடை அவிழ்த்து அம்மணமாக்கி தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தும் மலையாளிகள்.

”துணியை அவிழ்த்துப் போடு… ம்ம்… கழட்டு!”

”ஐயோ வேணாம் சாமீ…”

”ஏய், விடுடி… துணியை விடுடி…”

”வேணாங்க… கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா… இனிமே இங்கே குளிக்க வரலீங்க… விட்ருங்க…”

”டேய்! இவளை மட்டுமில்ல… இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி…”

இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய ‘வன சம்ரக்ஷண சமிதி’ எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர் வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களை யும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது… அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது. இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் ‘அன்வேஷணம்’ (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட… விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

சட்டசபையில் இதுபற்றி மனிதாபிமானத்தோடு குரல் கொடுத்துள்ளார், கேரள காங்கிரஸ் எம்.ஏல்.ஏ-வான சதீஷன். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

”வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்களால் அந்தப் பெண்கள் அனுபவித்த சித்ரவதையைப் பார்த்து ஆடிப்போனேன். என்ன குரூரம்! அப்பாவிப் பெண் களிடம் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்த்ததும் கோபமாகித்தான் சட்டமன்றத்தில் இந்த விஷயத் தைப் பேசினேன். இப்படிப்பட்ட அரக்க மனம் கொண்டவர்களை எப்படி அரசாங்க வேலையில் வைத்திருக்கிறார்களோ? கம்யூனிஸ்ட் அரசால் இந்த மாநில நிலை எப்படி சீரழிந்துபோய் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது எங்கள் கடமை! இன்னும் பலர் இதேபோல கொடூரமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றி எல்லாம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், போராட்டத்தில் இறங்குவோம்…” என கொதித்தார்.

அந்த வக்கிர கும்பலின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட செங்கோட்டைவாசி ஒருவர், ”ரெண்டு மாசம் முந்தி என் மனைவியுடன் கும்பாவுருட்டி அருவிக்குப் போனேன். அப்ப ‘வன சம்ரக்ஷண சமிதி’ உறுப்பினர்கள் எங்களைப் பார்த்த பார்வையே சரியில்லை. அங்கிருந்து நாங்கள் காட்டுக்குள் நடந்து போகும்போது பின்னாலேயே வந்த வர்கள் என்னை மிரட்டி, ‘இவ யாரு? தமிழ்நாட்டில் இருந்து தள்ளிட்டு வந்துருக்கியா?’ன்னு அசிங்கமா கேட்டாங்க. ‘இவ என் மனைவி’ன்னு சொன்னதும், ஒருத்தன் என் கன்னத்தில் ‘பளார்’னு அடிச்சான். இன்னொருத்தன் என் மனைவியின் சேலையைப் பிடிச்சு இழுக்க… நாங்க ரெண்டு பேரும் கதறினோம். நல்லவேளையா, அந்த சமயத்தில் நாலஞ்சு தமிழ் ஆட்கள் அருவியில் குளிக்கறதுக்காக, தூரத்தில் வந்ததால், எங்களை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. தப்பிச்சோம், பொழைச்சோம்னு உடனே கிளம்பிட்டோம். இது பத்தி தென்மலை போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனா, அவங்க அதை வாங்கலை. கோர்ட், கேஸ்னு அலையணுமேன்னு அந்தப் பிரச்னையை அப்படியே விட்டுவிட்டோம்…” என்றார், இன்னும்கூட அதிர்ச்சி விலகாமல்.

அருவிக்கு நம்முடன் வந்திருந்த மலையாளப் பத்திரிகை நண்பர் ஒருவர், ”வன சம்ரக்ஷண சமிதி உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்களை தொடர்ந்து மோசமாத்தான் நடந்துறாங்க. ஒரு மாசத்துக்கு முன்னே தென்காசிப் பெண் ஒருத்தரின் புருஷனைக் கட்டிவெச்சு, அவரின் கண்முன்னாலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்கு இந்த கும்பல். 10 நாளு முன்னே, ஒரு பெண்னை ஓட ஓட விரட்டி இருக்காங்க. புகார் கொடுத்தால் அசிங்கம்னு எல்லாரும் போயிடறதால, இவங்களோட அட்டூழியம் தொடர்ந்துகிட்டிருக்கு. மரத்தில் ஏறி உட்கார்ந்துகிட்டு, பெண்கள் துணி மாத்தறதை எல்லாம் மறைஞ்சிருந்து செல்போனில் படம் பிடிக்கும் அக்கிரமமும் நடக்குது. கும்பாவுருட்டி மட்டுமில்லாமல் பாலருவியிலும் இதே நிலைமைதான். நாங்க பல தடவை போலீஸாரிடமும் வனத் துறை அதிகாரிகளிடமும் இதுபத்தி புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை…” என்று ஆதங்கப்பட்டார்.

கேரள வனத் துறை அமைச்சர் பினாய் விஷ்வத்தி டம் பேசியபோது, ”கும்பாவுருட்டி சம்பவம் பற்றிய தகவல் கிடைச்சதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கேன். இதுவரை எங்களுக்கு ஒரு புகார்கூட வரலை. ஆனாலும் காத்திருக்காமல், இதுபத்தி போலீஸாரும் வனத் துறை அதிகாரிகளும் இணைஞ்சு விசாரணை நடத்தறாங்க. தற்போது வன சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த ரெண்டு பேரைப் பிடிச்சு விசாரிக்குது போலீஸ். யார் தவறு செஞ்சி ருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கும். நாங்க இதை அரசியல் பிரச்னையா பார்க்காம, சமூக அவலமாகவே நினைச்சு நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்பதில் கவனமாக இருப்போம்!” என்று உறுதி கொடுத்தார்.

‘வனத் துறை ஊழியர்கள்…’ என்ற போர்வையில் காட்டில் உலவும் இந்த மிருகங்களை உடனே வேட்டையாடியாக வேண்டும் கேரள அரசு!

நன்றி: ஜூவி.
– ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

Advertisements

7 பதில்கள்

 1. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  🙂

 2. கொடுமை!.

  மலையாள மங்கைகளில் கொங்கைகளை அறுத்தெரிந்து பழி தீர்க்கும் காலம் விரைவில் வரும். அந்த ஆண் பேடிகளை அம்மனமாக்கும் காலம் வரை காத்திருப்போம்.

  http://sagotharan.wordpress.com/

 3. அட நாய்களா?நீங்கள் மனிதர்களா?கேரளாவில் பிறந்த நடிகர் விஷால்,நடிகர் ஆர்யா இருவரும் இதைப்பற்றி ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லையே! தமிழனின் காசு வேணும்,கேரளன் என்ற விசுவாசமும் வேண்டும். அப்படித்தானே?! இனி உங்கள் படங்களை நான் கனவிலும் பார்க்கப் போவதில்லை.

 4. all persons will punish to siviyar action.. please killl the alll auys.. that the some sill get all tof the famillliy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: